நாமல் குமார சற்றுமுன்னர் CID முன்னிலையில்…

நாமல் குமார சற்றுமுன்னர் CID முன்னிலையில்…

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் நாலகடி சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் செயல் இயக்குனர் நாமல் குமார சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் நாலகடி சில்வாவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

இது குறித்த தொலைபேசி உரையாடலின் குரல் பதிவு உள்ள தனது தொலைபேசியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டதற்கே ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் செயல் இயக்குனர் நாமல் குமார இவ்வாறு குறித்த திணைக்களம் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

இன்னும், துல்ஹிரி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தன்னிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.