பரீட்சை கருத்தரங்கு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை – மஹிந்த

பரீட்சை கருத்தரங்கு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை – மஹிந்த

பரீட்சை செயலமர்வு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றைக் காரணம் காட்டி செயமர்வுகளை ஏற்பாடு செய்து அதில் தேர்தல் குறித்து பிரச்சாரம் செய்யக் கூடாது.

அவ்வாறு செயலமர்வுகள் கருத்தரங்குகளை நடாத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பரீட்சை கருத்தரங்கு செயலமர்வு என்ற போர்வையில் நடத்தப்பட திட்டமிட்டுள்ள சகல தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும்.

மேலும், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்காக தோற்றும் மாணவ மாணவியரின் பெற்றோருக்கு குறிப்பாக தாய்மாருக்கு நடத்தப்படும் கருத்தரங்கு என்ற போர்வையிலான சகல பிரச்சார நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

இன்னும், சட்ட ரீதியான முறையில் மேற்கொள்ளப்படும் பாடசாலை பழைய மாணவர் ஒன்றிய கூட்டங்கள், பாடசாலை அபிவிருத்திக் கூட்டங்கள் போன்றவற்றை நடாத்த சட்டத்தில் எவ்வித தடையும் கிடையாது.

எனினும் இக்கூட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பங்கேற்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர்கள் இத்தடை உத்தரவினை பிறப்பிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

(riz)