சீனிக்கான சில்லறை விலையினை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை..

சீனிக்கான சில்லறை விலையினை அதிகரிக்க அனுமதி வழங்கவில்லை..

சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள புதிய வரியை கருத்திற் கொண்டு சீனிக்கான சில்லறை விலைகளை அதிகரிக்க அனுமதியளிக்கப்படவில்லை என நிதியமைச்சு ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்தியா, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய சீனி உற்பத்தி செய்யும் நாடுகளின் பெரும்போக உற்பத்தி காரணமாக, இலங்கைக்கு இறக்கமதி செய்யப்படும் 01Kg சீனிக்காக நிலவிய இறக்குமதி செலவு 75 ரூபாவில் இருந்து 55ஆக குறைவடைந்துள்ளது.

இதற்கமைய 18ம் திகதி முதல் அமுலாகும் வகையில், விதிக்கப்பட்டிருந்த புதிய வரி வரையரையின் கீழ், துறைமுக கட்டணம், தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன 1Kg சீனிக்காக 42 ரூபாவாக அறவிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த வரி அதிகரிப்பை கருத்திற் கொண்டு சீனி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், சீனிக்கான சில்லறை விலையை அதிகரிப்பார்களாயின், நுகர்வோர் நடவடிக்கை தொடர்பான அதிகார சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சு எச்சரித்துள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் சீனிக்கான மொத்த விலையை 15 ரூபாவினால் அதிகரிக்க சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரியை 11 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அடுத்தே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.