இலங்கையின் அபிவிருத்திக்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி…

இலங்கையின் அபிவிருத்திக்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி…

ஐக்கிய அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்க முன்வந்துள்ளதாக குறித்த கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Brock Bierman தெரிவித்துள்ளார்.

நேற்று(24) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியை வழங்குவதற்கான வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் அதனை அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்காக முன்வைக்கவுள்ளதாகவும் Brock Bierman தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கொழும்பில் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் இந்த நிதியுதவி தொடர்பில் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

இலங்கை பயணிகள் போக்குவரத்து சேவையின் அபிவிருத்திக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குமான புதிய செயற்திட்டமொன்றை அமுல்படுத்த குறித்த நிதியை முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.