35 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிப்பு…

35 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிப்பு…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 35 பேர் மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வௌிநாடுகளிலிருந்து இலங்கை வந்த 11 இலங்கை பிரஜைகளும், 24 வௌிநாட்டு பிரஜைகளும் இதில் உள்ளடங்குவதாக மலேரிய ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டுக்கு செல்பவர்கள், மலேரியா தொற்று காணப்படும் நாட்டிற்கு செல்வார்களாயின், மலேரியா கட்டுப்பாட்டு பிரிவில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு டொக்டர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வௌிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களும் வைத்தியரிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் மலேரியா ஒழிப்பு பிரிவு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர், கடந்த 6 வருடங்களாக நாட்டில் எவரும் மலேரியா காய்ச்சலுக்கு இலக்காகவில்லை எனவும் மலேரியா ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.