புதிய வாகன இறக்குமதிக்கு இன்று(29) நள்ளிரவு முதல் தடை..

புதிய வாகன இறக்குமதிக்கு இன்று(29) நள்ளிரவு முதல் தடை..

அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்துக்கு வௌிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அரச துறை உத்தியோகத்தர்கள் 06 மாதங்களுக்கு வாகன இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை இன்று(29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை வாகன இறக்குமதிக்காக கடன் பத்திரம் ஆரம்பிக்கும் போது அவற்றின் பெறுமதியின் 200 வீத பணம் வைப்புச் செய்யப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கொள்வனவு செய்யும் வாகனத்தின் மொத்தப் பெறுமதியில் 70 வீதத்தை லீசிங் செய்ய இதுவரை முடியுமாக இருந்ததுடன், தற்போது அந்த தொகை 50 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.