ஜூலை 3௦க்கு முன் சொத்து மற்றும் பொறுப்புக்கள் சமர்ப்பித்தல் வேண்டும்

ஜூலை 3௦க்கு முன் சொத்து மற்றும் பொறுப்புக்கள் சமர்ப்பித்தல் வேண்டும்

இம்முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஜூலை 30ம் திகதிக்கு முன்னர் சம்ர்ப்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில் தற்பொழுது மாவட்ட மட்டங்களில் வேட்பாளர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தமுறை தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிக்காட்டும் நிதி அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமது சொத்து விபரங்களை சமர்பிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் இந்த வேட்பாளர் அடையாள அட்டையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

(riz)