கூட்டணிக்கு ஹம்பாந்தோட்டையில் பாரியளவில் சரிவு – புலனாய்வு பிரிவு தகவல்

கூட்டணிக்கு ஹம்பாந்தோட்டையில் பாரியளவில் சரிவு – புலனாய்வு பிரிவு தகவல்

எதிர்வரும் பொது தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூட்டணி பெரிய அளவிலான தோல்வியை சந்திக்கும் என புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கைவிட்டு சென்றுள்ளமையினாலும், நாமல் ராஜபக்ஷ மீது கொண்டுள்ள அதிருப்தியுமே இந்நிலைமைக்கு முதல் காரணம் என புலனாய்வு பிரிவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் ஹம்பாந்தோட்டை கிராமிய மக்களை மறந்துவிட்டு பயன் இல்லாத பெரிய அளவிலான திட்டங்கனை அறிமுகப்படுத்தியமையினாலும் கிராம மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமை காரணமாக இதன் அனுகூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் சமமான வாக்குகள் கிடைக்கும் எனவும், பல காலங்களின் பின்னர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு இதுவரை கிடைத்த ஆசனங்கள் 02, எனினும் இம்முறை இலகுவாக 03ஆக உயரும் எனவும் புலனாய்வு பிரிவு மேலும் கூறியுள்ளது.

கூட்டணிக்கு கடந்த தேர்தலின் போது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கிடைத்த 05 ஆசனங்கள் 03ஆக குறைவது உறுதியாகியுள்ளதாகவும் குறித்த பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

(riz)