மைத்திரி மற்றும் கோட்டா கொலைச் சதியில் விமல் கைது செய்யப்பட வேண்டும் – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி…

மைத்திரி மற்றும் கோட்டா கொலைச் சதியில் விமல் கைது செய்யப்பட வேண்டும் – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் “ரோ” உளவுப் பிரிவின் உறுப்பினர் ஆவார் எனவும் இவருடைய அங்கத்தவர் இலக்கமும் கண்டறியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்த கருத்துக்கு அமைய விமல் வீரவங்சவை கைது செய்திருக்க வேண்டும் அல்லது அவரிடம் சி.ஐ.டி. விசாரணை நடாத்தியிருக்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த இரண்டும் செய்யப்படாமல் அரசாங்கம் பொறுப்பற்று இருப்பதில் மர்மம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கருத்து பொய்யாயின் அவரைக் கைது செய்திருக்க வேண்டும். இல்லாவிடின், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டும் செய்யப்படவில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.