டுவிட்டருக்கு தடை விதித்தது துருக்கி

டுவிட்டருக்கு தடை விதித்தது துருக்கி

சுரக் என்பது துருக்கி நாட்டின் தென்கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள நகரம். இது சிரியா நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ள குர்தீஸ் மக்கள் அதிகம் வசிக்கும் நகரமாகும். இந்நகரில் கடந்த 19-ம் திகதி மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திடீரென குண்டு வெடித்தது.

இச்சம்பவ இடத்திலேயே 32 பேர் கொல்லப்பட்டனர்.  100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் படங்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் வேகமாக பரவ ஆரம்பித்தது.

இப்படங்களை பார்த்த அந்நாட்டு மக்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். பெரிய அளவிளான போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

இதனால் கலக்கம் அடைந்துள்ள துருக்கி அரசு, டுவிட்டர் தளத்தை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

(riz)