நான் வந்து 10 மாதமே ஆகிறது – ஹதுரு தோல்விக்கான காரணத்தினை கூறுகிறார்..

நான் வந்து 10 மாதமே ஆகிறது – ஹதுரு தோல்விக்கான காரணத்தினை கூறுகிறார்..

தான் இலங்கை அணியின் பயிற்சிப் பொறுப்புக்களை பொறுப்பற்று வெறும் 10 மாதங்களே ஆகின்றதாகவும், எதிர்வரும் உலகக் கிண்ண போட்டியில் சாதிக்க தயாராகி வருவதாகவும் இங்கிலாந்து அணியுடன் நேற்று(18) கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தெரிவித்திருந்தார்.

“இங்கிலாந்து அணியுடனான இரண்டு போட்டிகளிலும் எமக்கு வெற்றி பெற வாய்ப்புக் கிட்டியது.. குறித்த இரண்டு போட்டியிலும் நாணயற் சுழற்சியில் தோற்றமையே காராணமாகும். எதிர்வரும் காலங்களில் நாம் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் மோதவுள்ளோம். அப்போது அணியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எவ்வாறாயினும், எமது பிடி எடுப்புகள் மிகவும் சிறந்தது என கூற முடியாது. ”

#சந்திமால் / அகில

“ஐசிசி பரிசோதனைகளுக்காக அகில தனஞ்சய 23ம் திகதி பிரிஸ்பேன் செல்லவுள்ளதால் மூன்றாவது போட்டியில் பங்கேற்க மாட்டார். சந்திமால் நாளை(இன்று) உடற் தகைமை பரிசோதனைக்கு முகங் கொடுக்கிறார். அதில் அவர் தேர்ச்சி பெற்றால் 23ம் திகதி இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டியில் விளையாடுவார்”

# திக்வெல்ல

“எந்தவொரு வீரருக்கும் இந்த ஆடுகளத்தில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல.. இந்த வருடத்தில் 600 ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் இடையே குசல் உள்வாங்குகிறார். அவ்வாறே கடந்த காலியில் இடம்பெற்ற போட்டியின் போது 45 ஓட்டங்களைப் பெற்றார். நிரோஷன் திக்வெல்லவை பொறுத்தமட்டில் எமக்குள்ள சிறந்த விக்கெட் காப்பாளர்.. அவர் துடுப்பாட்டத்திலும் முன்னோக்கி செல்வார் என்ற நம்பிக்கை உண்டு.. ”