புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் வெளியாகும் முத்து…

புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் வெளியாகும் முத்து…

ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படம், புதிய தொழில் நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாக இருக்கிறது.

1995-ம் ஆண்டு வெளியான முத்து படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்தார். இந்த படத்தில் மீனா, ராதாரவி, சரத்பாபு, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழில் பெரிய வெற்றி பெற்ற முத்து படம் ஜப்பானிலும் வெளியானது.

ஜப்பானில் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன போதிலும் அந்த தாக்கம் இன்னும் இருப்பதால் படத்தை தற்போதைய தொழில்நுட்ப வசதிகளான 4கே திரை மற்றும் 5.1 ஒலி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள்.

டிசம்பர் மாதம் வெளியிடுவதற்காக படத்தை டிஜிட்டலாக மாற்றி தொழில் நுட்பத்தை புகுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஈடன் என்டெர்டெயின்மெண்ட் என்ற ஜப்பானிய பட நிறுவனம் 25 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

மேலும் திரையரங்குகள் அதிகரிக்கப்படலாம் என்கிறார்கள். வெளிநாடுகளில் மறுவெளியீடான படம் என்ற பெருமையை முத்து படம் பெற இருக்கிறது.