கோல்டன் கீ நிறுவனத்தில் ஏமாந்தவர்களுக்கான நிதி மீள் செலுத்தும் பணி நாளை முதல்

கோல்டன் கீ நிறுவனத்தில் ஏமாந்தவர்களுக்கான நிதி மீள் செலுத்தும் பணி நாளை முதல்

நிதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டு ஏமாந்தவர்களுக்கான பணத்தை மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம், வைப்பீட்டாளர்களுக்கான பணத்தை மீளச்செலுத்தும் முதல் கட்ட பணி நாளை  முதல் ஆரம்பமாகிறது.

20 இலட்சம் ரூபாவுக்கு குறைந்த தொகையை வைப்பிலிட்டவர்கள் அதில் ஒரு தொகையை நாளைய தினம் பெற்றுக்கொள்ளலாம். இவர்களுக்கான முழுத்தொகையும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்.

இதற்கென திறைசேரி 544.3 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவின் கோரிக்கைக்கு அமைய இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

20 இலட்சத்துக்கும், ஒரு கோடி ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகையை வைப்பிலிட்டவர்கள் அடுத்த மாதம் முதலும், ஒரு கோடி ரூபாவுக்கு மேலான தொகையொன்றை வைப்பிலிட்டவர்கள் அடுத்த வருடம் முதலும் தமது பணத்தை கட்டம் கட்டமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கென அரசாங்கம் 7000 மில்லியன் ரூபாவை செலவிடுகிறமை குறிப்பிடத்தக்கது.

(riz)