ஐக்கிய தேசியக் கட்சி பாத யாத்திரையில்…

ஐக்கிய தேசியக் கட்சி பாத யாத்திரையில்…

ஜனநாயகத்தை வென்றெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” பாத யாத்திரை மூலம் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மாதம் முதலாம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற உருப்பினர வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன;

கொழும்பு நகர மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்படும் குறித்த பாத யாத்திரையானது, மொரட்டுவ, பாணந்துறை, அளுத்கம, அம்பலங்கொடை, ஹிக்கடுவ, காலி, மாத்தறை மற்றும் தெவிநுவர வரையிலும்… கதரகமை வரையிலும், அதன் பின்னர் கண்டி வரையிலும்… குறித்த பாத யாத்திரை செல்லவுள்ளது. பின்னர் அனுராதபுரம் வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனூடாக நாம் முழு நாட்டினையும் ஆக்கிரமிக்கு செய்வோம்.. குறித்த பயணத்தில் நாட்டில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி ஜனநாயகத்தின் வெற்றிக்காக கொழும்பில் ஒன்று சேரவுள்ளோம்..” எனத் தெரிவித்திருந்தார்.