ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி வழங்கவில்லை – சீன நிறுவனம் மறுப்பு

ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி வழங்கவில்லை – சீன நிறுவனம் மறுப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி செய்யவில்லை என்று சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு நிதி உதவி அளித்ததாக வெளியாகும் செய்திகளுக்கு சீன நிறுவனம் மறுப்பினை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தமது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.

சர்வதேச மதிப்புப்பெற்ற தமது நிறுவனத்தை உள்ளூர் ஊடகம் ஒன்று பிழையாக கருதி செய்தி வெளியிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பிழையான கருத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாதென சீன நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

முதலீட்டு நாடுகளுக்கு பிழையான சமிஞ்சையை காட்டக்கூடாது என்றும் கடந்த 17 வருடங்களாக இலங்கையுடன் செயற்பட்டுள்ள தமது நிறுவனம் இலங்கை மக்களின் மனங்கள் புண்படும் வகையில் செயற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

சுமார் 80 நாடுகளின் செயற்படும் தமது நிறுவனம் எந்த நாட்டிலும் அரசியலில் தமது செல்வாக்கை செலுத்தியதில்லை என்றும் சீனா ஹாபரிங் நிறுவனம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(riz)