தயாசிறி ஐ.தே.கட்சியில் இணைந்து கொள்வதில் அகில கடும் எதிர்ப்பு..

தயாசிறி ஐ.தே.கட்சியில் இணைந்து கொள்வதில் அகில கடும் எதிர்ப்பு..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றுசேர உழமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தவண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு காரணமாக, எதிர்வரும் தேர்தலில் தமது வாக்குகளை தக்க வைத்தல் மற்றும் மாவட்ட வேட்பாளர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் என தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு இருக்க தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறே ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹஷீம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதோடு, பைசர் முஸ்தபாவை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்துக் கொள்வதில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மரிக்கார் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.