‘எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ வெளியிட்டது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

‘எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ வெளியிட்டது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

‘எதிர்காலத்திற்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் கொழும்பில் இந்நிகழ்வு  இடம்பெற்றது.

எனினும், இந்த நிகழ்வில் ஐக்கிய முன்னணியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

“நாட்டுக்காக உயிர் கொடுப்போம்….புதிதாக ஆரம்பிப்போம்” என்று அறைகூவல் விடுத்திருக்கும் மேற்படி தேர்தல் விஞ்ஞாபனம், மாற்றத்துக்கான மாற்றம் எனும் உப தலைப்பில் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலம் பற்றிப் பேசுகிறது.

அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்காத சாதாரண சமூகமொன்றை ஸ்தாபித்தல், பொருளாதார அபிவிருத்தியோடு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்,

ஒரே தேசத்துக்குள் ஜாதி, மத அடிப்படையிலான சுதந்திரத்தோடு மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்தல் ஆகியன தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்படி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(riz)