சீன தைசூ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

சீன தைசூ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் தைசூ விமான நிலையத்தை மூட அந்நாட்டு விமானத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் கடந்த 26 ஆம் தேதி தைசூ விமான நிலையத்தில் இருந்து குவாங்சூ நகருக்கு சென்ஸ்ஹன் நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்றது. 100 பயணிகள் அந்த விமானத்தில் பயணம் செய்தனர். விமானம் குவாங்சூ அருகே வந்தபோது பயணிகளில் ஒருவர், தன் உடலில் மறைத்து வைத்திருந்த தீப்பெட்டி மூலம் விமானத்தின் இருக்கையில் தீ பற்ற வைத்தார். உடனே, விமான ஊழியர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் இழப்பொன்று தவிர்க்கப்பட்டது.

தைசூ விமான நிலையத்தின் உச்சபட்ச சோதனையும் மீறி பயணி ஒருவர் தன்னுடன் தீப்பெட்டி எடுத்துச் சென்றது பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு தைசூ விமான நிலையத்தை தற்காலிகமாக மூட சீன விமானத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வருவதாக விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(riz)