ஐதராபாத்தில் ஆர்யாவுக்கு திருமணம்…

ஐதராபாத்தில் ஆர்யாவுக்கு திருமணம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கு எதிர்வரும் மார்ச் 10-ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஓன்றில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. அதில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும், சாயி‌ஷாவுக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Image result for arya and sayesha