ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் – பெண்களுக்கு பாடம்…

ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் – பெண்களுக்கு பாடம்…

துருக்கியில், ஒழுங்கு நடத்தைகள் குறித்த படிப்பு ஒன்றில் பெண்கள் ஐஸ்கிரீமை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டிருப்பது, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு பெண்ணாக எப்படி இருக்க வேண்டும்” என்ற பாடம், இஸ்தான்புல்லின் பழமைவாத பக்சிலர் நகராட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது.

அந்த பாடத்தில், பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு ஆடை அணிய வேண்டும், நடக்க வேண்டும், பேச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சரியாக அமர வேண்டும், சாப்பிடும் போது குறைவாக பேச வேண்டும், காலையில் அதிக மேக்-அப் போடக்கூடாது, சொற்களை பார்த்து பயன்படுத்த வேண்டும், “ப்ரோ” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

பல ஆலோசனைகள் பொதுவானதாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், , எப்படி ஐஸ்-கிரீம் சாப்பிட வேண்டும் என்று கூறியது, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழிகாட்டுதலில் பெண்கள் ஐஸ்-க்ரீமை நாக்கால் நக்கி சாப்பிடக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அது ஏன் என்று கூறப்படவில்லை.

இந்த வழிமுறை பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக பலரும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.