மாகந்துரே மதூஷ் உடன் சுமார் அரசியல்வாதிகள் 80 பேர் தொடர்பு – SB இனது கணிப்பும் சரியானது…

மாகந்துரே மதூஷ் உடன் சுமார் அரசியல்வாதிகள் 80 பேர் தொடர்பு – SB இனது கணிப்பும் சரியானது…

துபாயில் கைதான மாகந்துரே மதூஷ் உடன் தொடர்பிலிருக்கும் அரசியல்வாதிகள் 80 பேரின் தகவல்கள் அரச புலனாய்வு துறை வசம் கிடைத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டுபாயில் வைத்து பாகிஸ்தான் குழுவொன்றுடன் வியாபார ரீதியாக ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே மதூஷ் குறித்த தகவல்கள் அரச புலனாய்வு துறைக்கு கிடைத்திருந்தது.

ஒன்றாக தூள் வியாபாரத்தில் ஈடுபட்ட இவர்களிடையே பல இலட்சங்களுக்கான டொலர் பிரச்சினையினால் அவர்களுக்குள் முரண் ஏற்பட்ட நிலையில், மதூஷை பழி வாங்க அவர்களிடமிருந்தே மதூஷ் குறித்த தகவல்கள் நுல்லியமாக கிடைத்தது.

டுபாயில் நடக்கவிருந்த கொண்டாட்டம் மதூஷியின் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம் என சொல்லப்பட்டாலும் , உண்மையில் அதிரடிப்படை லத்தீப் அவர்களது ஓய்வு குறித்த மகிழ்ச்சியில் நடத்தப்பட்ட கொண்டாட்டம் என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்கவும் கருத்து வெளியிட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அன்றைய விருந்துக்கு அனைத்து பாதாள குழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கொண்டாட்ட நிகழ்வைக் கூட வேறோருவர் பெயரிலேயே மதூஷ் ரிசர்வ் செய்திருந்தார்.

அன்றைய சுற்றி வளைப்பின் போது டுபாய் ஹோட்டலில் வைத்து 31 பேரும் வெளியில் வைத்து 14 பேரும் கைதாகியமையும் குறிப்பிடத்தக்கது.