தன்னையும் சந்திமாலையும் நீக்கியமை மற்றும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பில் ஹதுரு கருத்து…

தன்னையும் சந்திமாலையும் நீக்கியமை மற்றும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பில் ஹதுரு கருத்து…

தனக்கு கிடைக்கப் பெற்றுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் கடமை, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் தேர்வுக் குழுவிற்கு மாத்திரம் வழங்குவது கேள்விக்குரியதாகும் எனவும், அதற்கு காரணம் இருக்க வேண்டும் என்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க விசேட கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றுடனான நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இடையே இடம்பெற்ற குறித்த நடவடிக்கையானது மனவேதனை அளிப்பதாகவும் அதனால் தன மிகவும் சோர்ந்து போனதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கிரிக்கெட் வாரியத்தில் கேள்வி எழுப்பிய போதிலும், அதற்கான உரிய பதில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், டெஸ்ட் அணியின் தலைவராக கடமையாற்றிய தினேஷ் சந்திமாலை குறித்த பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் தான் ஆச்சரியம் அடைவதாகவும் இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும் ஹதுருசிங்க மேலும் தெரிவித்திருந்தார்.