சந்திரிக்காவின் முக்கிய அறிவிப்பு இன்று

சந்திரிக்காவின் முக்கிய அறிவிப்பு இன்று

இலங்கையில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தேர்தலுக்கான வேட்புமனு சந்தர்ப்பத்தில் வெளிநாட்டிலிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கை வந்தவுடன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சந்திரிக்கா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன்போது, ஜனவரி 8ம் திகதி பெற்ற மக்கள் ஆணையை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தெளிவுபடுத்துவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைத் திரும்பிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இதுவரையில் எந்தவொரு அரசியல் மேடைகளிலும் ஏறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.