பயணப்பொதியிலிருந்து கண்டெடுக்கப்பட் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

பயணப்பொதியிலிருந்து கண்டெடுக்கப்பட் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிட பயணப் பொதியொன்றுக்குள்ளிருந்து கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதன்கிழமை சடலமாக கண்டெக்கப்பட்டவர், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்ட 34 வயதுடைய ரங்கன் கார்த்திகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பெண் கொழும்பு செட்டியார்த் தெருவில் உள்ள தனியார் விடுதியில் ஒன்றில் தங்கியுள்ளதாகவும், அவருடன் பிறிதொரு ஆடவரும் கடந்த 9 நாட்களாக தங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸார் வெளியிட்ட புகைப்படத்தினை அடையாளம் கண்ட குறித்த விடுதியில் உள்ளவர்கள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், அவருடைய ஒரு பிள்ளை கொலைச் செய்யப்பட்டவரின் தாயாருடன் வசித்து வருவதாகவும் அறியகிடைத்துள்ளது.

கடந்த நாட்களில் குறித்த பெண் அந்த தனியார் விடுதியில் பிறிதொரு ஆணுடன் தங்கி இருந்துள்ளார். சம்பவதினம் அதிகாலை 12.15 மணியளவில் குறித்த ஆண் விடுதியில் இருந்து குறித்த பயணப் பெட்டியை கொண்டுச் சென்றுள்ளதாகவும், அவர் பயணப் பெட்டியை இழுத்துச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சீ.சீ.டி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனார்.

தற்போது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.