நுவரெலியா மாவட்ட ஐமசுகூ வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் வாகனம் பொலிஸாரின் கைவசம்

நுவரெலியா மாவட்ட ஐமசுகூ வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் வாகனம் பொலிஸாரின் கைவசம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பீ.ரத்நாயக்கவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் ஒன்று இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஹற்றன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் ஹற்றன் மல்லியப்பு சந்தி அருகில், நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் சீ.பீ.ரத்நாயக்கவின் புதல்வரும், சாரதியும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுடன் தொடர்புடைய வேட்பாளர் இல்லாமல் இருந்த காரணத்தினாலேயே வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஸ்டிக்கர்களை அகற்றிய பின்னர் வாகனத்தை மீண்டும் சீ.பீ.ரத்நாயக்கவின் புதல்வரிடம் கையளித்துள்ளனர்.