பாகிஸ்தான் இராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன் – ஷஹீட் அஃப்ரிடி…

பாகிஸ்தான் இராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன் – ஷஹீட் அஃப்ரிடி…

(FASTGOSSIP| COLOMBO)- இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான் பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் இருக்கும் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தை நினைத்துப் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷஹீட் அஃப்ரிடி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

புல்வாமா தாக்குதல் நடந்தபோதும் இது போன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். புல்வாமா தாக்குதலுக்குப் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டியபோது, அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும் அதிரடி ஆட்டக்காரருமான ஷாஹிட் அஃப்ரிடி ‘ பிரதமர் இம்ரான் முற்றிலும் தெள்ளத் தெளிவாகப் பேசியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டுருந்தார்.

இது இந்தியாவில் இருக்கும் அஃப்ரிடியின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்திய விமானப் படை விமானி அபினந்தனின் வீடியோவைப் பதிவிட்ட அஃப்ரிடி “பாகிஸ்தான் ராணுவப்படையை நினைத்துப் பெருமைக் கொள்கிறேன். எங்கள் எதிரிகளையும் இப்படிதான் கணிவுடன் நடத்துவோம். இந்தியாவால் தொடங்கப்பட்ட இந்த போர் இப்போது முடிவுக்கு வர வேண்டும். நாங்கள் அமைதியை விரும்பும் நாடு. இதற்கு ஒரே தீர்வுப் பிரதமர் இம்ரான் கான் கூறியது போல் இருநாடுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே’’ என்றுக் குறிப்பிட்டுள்ளார்.