மஹிந்தவின் புகைப்படங்களை அகற்றுமாறு உத்தரவு

மஹிந்தவின் புகைப்படங்களை அகற்றுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை அகற்றுமாறு தேர்தல் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள், பதாகைகள் உள்ளிட்டன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான பதாகைகளை தற்காலிக அடிப்படையில் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி தேர்தல் ஆணையாளர் பிமல் இந்திரஜித் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மாவட்டத்தின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த உத்தரவினை எந்தவொரு உள்ளூராட்சி மன்றமும் இதுவரையில் அமுல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.