அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 12 பேர் காயம்

கொழும்பு புளுமென்டல் பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகம் காலை 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 12 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.