துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி [Images Inc..]

துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி [Images Inc..]

கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாயக்கவின் ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் காயமடைந்த 11 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகின்றார்.

நவீன ரக காரொன்றில் வருகைதந்த சிலர் இன்று முற்பகல 11.45 அளவில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

படங்கள்:கே.அஸீம் முஹம்மத்

 

11813517_847811611934942_6330758483669380079_n 11219519_847811631934940_7381375926965226293_n 11219519_847811631934940_7381375926965226293_n 150731072659_colombo_ravi_karunanayaka_shooting_640x360_bbc_nocredit 150731073137_colombo_ravi_karunanayaka_shooting_640x360_bbc_nocredit