நியசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை…

நியசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை…

(FASTNEWS|NEW ZEALAND) நியூசிலாந்து பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலையடுத்து, துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் இதில், 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் செயல்பாட்டில் இருக்கும் இராணுவத்தில் உள்ளதை போன்ற தானியங்கி ரக துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்றும் தானியங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் மேகசின்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாகிகள் நாடு முழுவதும் தடை செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த தடை அடுத்த மாதத்தில் இருந்து நடைமுறைபடுத்தப்படும் எனவும் இது தொடர்பாக சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.