தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

(FASTNEWS | COLOMBO) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, சே​​வை நிமித்தம் 9 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எம்.எஸ். மஹாநாம கண்டி பொலிஸ் தலைமையகத்திற்கும் மன்னார் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஆர் ரத்னாயக்க அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரிஷாந்தன் மன்னார் பொலிஸ் தலைமையகத்திற்கும் மனித வள பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ஐ. ஜனக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மனித வள முகாமையாளர் பிரிவிலிருந்து பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.பீ. மடக்கும்பர மனித வள பதில் முகாமையாளராகவும் கஹவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஓ. வீ. ஆர்.பீ. ஒலுகல ரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையக குற்றவிசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கே. ஏ.பி பெரேரா பதில் பொறுப்பதிகாரியாக கஹவத்தைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.டீ.ஏ. ஜயந்த வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியாகவும் மேல் மாகாண வடக்கு போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.எஸ். பெரேரா தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.