“அமைச்சர்களது நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது” பிரதமரால் ஜனாதிபதிக்கு கடிதம்

“அமைச்சர்களது நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது” பிரதமரால் ஜனாதிபதிக்கு கடிதம்

(FASTGOSSIP | COLOMBO) – முஸ்லிம் அமைச்சர்கள் பதவி இராஜினாமா செய்ததன் பின்னர் குறித்த பதவி வெற்றிடங்களுக்கு மூன்று பதில் அமைச்சர்களை நியமித்திருப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று முன்தினம் (11) கடிதம் ஒன்றினை அனுப்பி அறியப்படுத்தியுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களாக நியமிக்கக் கோரி ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகிய அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பெயர்களை ஜனாதிபதிக்கு கடந்த நாளொன்று அனுப்பி வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த பெயர்களை நிராகரித்து ஜனாதிபதியினால் பதவி வெற்றிடங்களுக்கு அரச மற்றும் பிரதி அமைச்சர்களை பதில் அமைச்சர்களாக கடந்த 10ம் திகதி நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, லகி ஜயவர்த்தன நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களுக்களுக்கு பதில் அமைச்சராகவும், அரச தொழில் முயற்சி, பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக அனோமா கமகேவும் கைத்தொழில், வர்த்தகம், நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக் குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதியமைச்சர் புத்திக பத்திரண ஆகியோர்

அமைச்சரவை அமைச்சுக்கள் இராஜினாமா செய்திருந்த போது பதில் அமைச்சர்கள் நியமிக்க முடியாது எனவும் அது 19வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் குறித்த பிரதமரின் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.