மாம்பழ கிரீம் புட்டிங்

மாம்பழ கிரீம் புட்டிங்

(FASTGOSSIP|COLOMBO) – இன்று மாம்பழ கிரீம் புட்டிங் வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள் :
கிரீம் – 1/2 கப்,
கிரீம் சீஸ் -2 கப்,
சீனி – 2 கப்,
ஜெலட்டின் – 1 டீஸ்பூன்,
தண்ணீர் -1/4 டம்ளர் (ஜெலட்டின் கரைக்க)
மாம்பழ எசென்ஸ் – சிறு துளி,
திராட்சைப்பழம் – 1/4 கிலோ
மாம்பழம் – 1 கப்.

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து சுமார் 2 நிமிடம் அடித்து நுரைத்து வெண்ணெய் போல் வரும்போது எசென்ஸ் கலந்து அடிக்கவும்.

இப்போது ஃப்ரெஷ் கிரீம் அல்லது பாலேடு சேர்த்துக் கலக்கவும்.

ஜெலட்டினை சிறிதளவு வெந்நீரில் கரைத்து துளித் துளியாக அடித்த கிரீம் சீஸ் கலவையில் சேர்த்து கைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.

கடைசியாக மாம்பழத் துண்டுகளைக் கலந்து ஒரு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டி ஃபிரிட்ஜில் 5 மணிநேரம் செட் செய்து சில்லென்று பரிமாறவும்.

சூப்பரான மாம்பழ கிரீம் புட்டிங் ரெடி.

மாம்பழம் இல்லையென்றால், அதற்குப் பதில் அன்னாசி, திராட்சையைக் கலந்து செட் செய்து கொடுக்கலாம்.