நிரந்தர எடை குறிப்பிற்கு பிளாக் காபி..

நிரந்தர எடை குறிப்பிற்கு பிளாக் காபி..

(FASTGOSSIP | COLOMBO) – நிரந்தர எடை இழப்பு என்பது உடலில் இருக்கும் கொழுப்புகள் வெளியேறும் போது தான் நடக்கும். அதிக கலோரிகளை எரிப்பதன் மூலம் இது நிரந்தர எடை இழப்பிற்கும் வழிவகுக்கிறது. அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்கப்படும் போது உங்கள் எடை தானாக குறைகின்றது.

அந்தவகையில் நிரந்த எடை குறைப்பிற்கு பிளக் காபி பெரிதும் உதவி புரிகின்றது. ஏனெனில் இதில் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் அதிகம் உள்ளதால் தான். பிளாக் காபி குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றி தற்காலிக எடை குறைப்பிற்கு உதவுகிறது. இதற்கு காரணம் இதில் அதிகளவு இருக்கும் காஃபைன்தான்.

பிளாக் காபியில் இருக்கும் காஃபைன் வளர்ச்சிதை செயல்பாட்டை தூண்டுவதுடன் ஆற்றலையும் அதிகரிக்கிறது, இது பசியை கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் பிளாக் காபியில் 5.4 கலோரிகள் உள்ளது.

மேலும் உணவுக்குப் பிறகு காஃபின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த பிளாக் காபியை ஒருவர் குடிக்கும்போது அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதையும் தடுக்கிறது.

அதுமட்டுமின்றி எடை குறைப்பிற்கு உதவும் பல ஆன்டி ஆக்சிடண்ட்களும் இதில் உள்ளது.

எச்சரிக்கை
அதிகளவு பிளாக் காபி குடிப்பது ஹைப்பர்டென்ஷனை ஏற்படுத்தும். மேலும் அதிகளவு காஃபைன் உங்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஒருநாளைக்கு இரண்டு கப் பிளாக் காபி மட்டும் குடிப்பது நல்லது.