மரண தண்டனை நிறைவேற்றும் காலம், இடம் எதுவும் ஜனாதிபதியால் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை – சிறைச்சாலை ஆணையாளர்

மரண தண்டனை நிறைவேற்றும் காலம், இடம் எதுவும் ஜனாதிபதியால் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை – சிறைச்சாலை ஆணையாளர்

(FASTNEWS | COLOMBO) – மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி இதுவரை அறிவிக்கவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே.டப்ளியூ. தென்னகோன் உச்ச நீதிமன்றத்தில் இன்று(05) தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் கைதிகளின் பெயர், காலம், இடம் என்பன அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று(05) தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, தீபாலி விஜேசுந்தர, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அதன் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த சிறைச்சாலைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த 25ம் திகதி நான்கு போதைப் பொருள் குற்றவாளிகள் 04 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதுடன், அது நடைமுறைப்படுத்தும் திகதி குறித்து அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்ததாக, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.