உதட்டின் கருமையை போக்கும் எளிய முறை

உதட்டின் கருமையை போக்கும் எளிய முறை

(FASTGOSSIP|COLOMBO) – முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, அழகுக்காக அல்ல. உங்களின் உடல்நிலையை அறிந்து கொள்ளுங்கள். அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுவோரின் உதட்டைப் பாருங்கள். அதிகம் தண்ணீர் அருந்தாதவர்கள் தங்களது உதட்டைப் பார்க்கவும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை உண்டாலே கருமை நிற உதடு சரியாகும்.

தினமும் மாதுளை, திராட்சை, விட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்கள், 2-3 லிட்டர் தண்ணீர், நீர் மோர், இளநீர், பசுநெய் கலந்த உணவுகள், கீரைகள், பழச்சாறுகளை எடுத்து கொள்ளுங்கள்.

# வாரத்துக்கு 3 நாள் லிப் ஸ்கரப் செய்வது நல்லது. வெள்ளை சர்க்கரையை லேசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சர்க்கரை துகள்கள் இருக்க வேண்டும். அதுபோல. இதனுடன் காபி தூள் சேர்க்கவும். இதை உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். குறைந்தது 5 நிமிடங்கள். பின்னர் கழுவி விட்டு தேய்காய் எண்ணெய் தடவலாம்.

# இட்லி மாவு, தோசை மாவு தடவியும் ஸ்கரப் செய்யலாம். புளிச்ச கீரை சாறு, எலுமிச்சை சாறு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை கலந்து விடவும். இதைக் கொண்டு ஸ்கரப் செய்யலாம்.

#தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர், கொகோ பட்டர், கற்றாழை, அவகேடோ கலந்த லிப் பாம் தேர்ந்தெடுக்கலாம்.

# வீட்டில் இருக்கும்போது, தேங்காய் எண்ணெய், நெய், லிப் பாம் பயன்படுத்தலாம். நிறமில்லாத லிப் பாம் பயன்படுத்துங்கள். இரவில் தூங்கும் முன்னர் அவசியம் நீங்கள் போட்ட லிப் மேக்கப்பை நீக்கிவிட்டு வெறும் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு தூங்குவது நல்லது.

# நெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இவை அனைத்தும் உதட்டுக்கு நல்லது. பகலில், இரவில் இதை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள்.

# ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, உதட்டில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

# இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவலாம். அடுத்த நாள் கழுவி விடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

# வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.

# தினமும் ஒரு ஐஸ் கியூப் எடுத்து உதட்டில் தடவி மசாஜ் செய்யுங்கள். பீட்ரூட் சாறு, கேரட் சாறு, வெள்ளரி சாறு போன்றவற்றைகூட ஐஸ் கியூப்பாக்கி உதட்டில் தடவலாம்.

# ஒரு விட்டமின் இ காப்சூல் எடுத்து, அதன் எண்ணெயை உதட்டில் தடவி வருவதும் பலன் தரும்.