போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு – ஐ. நா அறிக்கை

போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு – ஐ. நா அறிக்கை

(FASTNEWS|COLOMBO) – உலக அளவில் நடைப்பெற்ற போர் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக என ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் அதிகரித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நடைப்பெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் உயிரிழந்த குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்தப்படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.