முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத் விடுதலை

(FASTNEWS | COLOMBO) – லிட்ரோ வாயு நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் ஜனாதிபதி செயலணியின் பிரதானி காமினி செனரத், பியதாஸ குடாபாலகே, லசந்த பண்டார ஆகிய மூவரையும் விடுதலை செய்ய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் இன்று(08) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றம் சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான முறையில் சாட்சிகள் இல்லாத காரணம் இல்லை என நிரந்தர நீதாய நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி சம்பத் அபேகோன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.