நிதியமைச்சர் தலைமையில் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று(09)

நிதியமைச்சர் தலைமையில் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று(09)

(FASTNEWS| COLOMBO) – யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று(09) நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது.

தொழில் முயற்சியாளர்கள் 10 இலட்சம் பேரை உருவாக்கும் நோக்கில், நிதியமைச்சால் நடத்தப்பட்டு வரும் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி, கருத்திட்டத்தின் மூன்றாவது தேசிய நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இக்காண்காட்சி நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளதுடன் வடக்கில் பிரதான மாவட்டமான யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி செப்டெம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.