உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை நீடிப்பு

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 23 ஆம் திகதி அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில்,
தெரிவுக் குழுவின் பதவிக் காலத்தை செப்டம்பர் 23 ஆம் திகதி வரையில் நீடிக்க நேர்ந்துள்ளதாகவும், குறித்த குழுவின் பணிகளை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தெரிவித்துள்ளார்.