மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் மண் சரிவு அபாயம்

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் மண் சரிவு அபாயம்

(FASTNEWS | COLOMBO) – மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கொட்டகலை மேபில்ட் தோட்ட பகுதியில் நான்காம் இலக்க லயன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழும் அபாயம் காரணமாக, குறித்த தொடர் லயன் குடியிருப்பில் வசித்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் குறித்த தோட்ட பகுதியில் உள்ள வாசிகசாலை மற்றும் கலாசார மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேரும் நேற்று(12) இரவு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.