சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை

சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே மாநகர சபையினால் சேகரிக்கப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குப்பைகளை சேகரிக்கும் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.