இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலையினால் போட்டிகள் இரத்து

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலையினால் போட்டிகள் இரத்து

(FASTGOSSIP| COLOMBO) – பாகிஸ்தானில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள டேவிஸ் கிண்ண தொடரில் இந்திய அணி கலந்து கொள்வதை அந்நாட்டு அரசாங்கம் தடைசெய்யாது என இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான உறவு நிலவுவதால் செப்டம்பர் 14, 15 இல் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற இருக்கும் ஆசியா-ஓசியானா குரூப் 1 டேவிஸ் கிண்ணத் தொடரில் இந்தியா பங்கேற்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 370 நீக்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடனான தூதரக உறவை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டுள்ளது. “இருதரப்பு போட்டியாக இருந்தால் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவது அரசியல் விவகாரம் ஆகியிருக்கும். ஆனால் டேவிஸ் கிண்ணம் இருதரப்பு போட்டியல்ல, அதனை ஒருங்கிணைப்பது ஒரு சர்வதேச விளையாட்டு அமைப்பு,” என்று இந்திய மத்திய இளைஞர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

மேலும் ஒலிம்பிக் சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. எனவே, இந்திய அரசோ தேசிய சம்மேளனமோ இந்தியா பங்கேற்பதில் தலையிட முடியாது என்றார்.

நடுநிலையான ஒரு இடத்தில் இப் போட்டியை நடத்த வேண்டும் என அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ள போதும் இஸ்லாமாபதில் ஏற்பாடுகள் எற்கனவே துவங்கிவிட்டதால் தற்போது எந்த மாற்றமும் செய்ய இயலாது என பாகிஸ்தான் தரப்பு தெறிவித்துள்ளது.

இடத்தை மாற்றுவது குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திடம் கோரிக்கை வைக்கும் போது பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இருநாட்டு உறவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அனைத்து இந்திய டென்னிஸ் சங்கம் சுட்டிக்காட்டவுள்ளது.

1964 முதல் டேவிஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் பொருட்டு இந்திய அணி பாகிஸ்தான் சென்றது கிடையாது. 2008 மும்பை தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எந்த ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்கவும் இந்தியா தரப்பிலிருந்து யாரும் பாகிஸ்தான் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.