கோப் குழு முன்னிலையில் நான்கு அரச நிறுவனங்களை முன்னிலைப்படுத்த தீர்மானம்

கோப் குழு முன்னிலையில் நான்கு அரச நிறுவனங்களை முன்னிலைப்படுத்த தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நான்கு அரச நிறுவனங்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்திருந்தார்.

இதன்படி, எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனமும், 21 ஆம் திகதி லங்கா சதொச நிறுவனம் முன்னிலையாவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேநேரம் 22 ஆம் திகதி நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையும் 23 ஆம் திகதி மின்சார சபையையும் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளன.

இதேவேளை கடந்த 9 ஆம் திகதி கோப் குழு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அதன் நடவடிக்கைகள் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.