சங்காவை தலையில் தூக்கி ஆடுகின்றனர் – ஹதுருசிங்கவுக்கு செய்தது நம்பிக்கை துரோகம்

சங்காவை தலையில் தூக்கி ஆடுகின்றனர் – ஹதுருசிங்கவுக்கு செய்தது நம்பிக்கை துரோகம்

(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவை இலங்கை கிரிக்கெட் சபை நீக்கியமை முறையற்றது என இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“…சந்திக்க ஹதுருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியுடன் சேர்ந்தது தனிப்பட்ட முறையிலான ஒப்பந்தத்தில், நமது அழைப்பினை ஏற்றே இலங்கை கிரிக்கெட் இனை அவர் பொறுப்பேற்றார். அவ்வாறு இருக்க இப்போது அவரது சம்பளம் தொடர்பிலும், அவரது வேலை தொடர்பிலும் பகிரங்கமாக பேசுவது முற்றாகத் தவறு. அது கேவலமானது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இவ்வளவு தூரம் கீழ் மட்டத்திற்கு இறங்குவது கசப்பானது.

ஹதுருசிங்க என்பவர் இன்று உலகிலேயே மிகவும் சிறந்த பயிற்சியாளர்கள் 3-4 பேர்களில் முன்னிலையில் உள்ள ஒருவர். பங்களாதேஷ் அணியினை உச்ச கட்ட திறமைக்கு கொண்டு வந்த காலத்தில் தான் எமது அழைப்பினை ஏற்று இந்நாட்டுக்கு சேவை செய்ய முன்வந்தார். அவ்வாறு வந்த ஒருவரை இந்நாடு வழி நடத்தும் முறையே இவ்வாறு இருக்க அந்த மனிதர்கள் எவ்வளவு கீழானவர்கள் என புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்று நாம் குமார் தர்மசேன, ரஞ்சன் மடுகல்ல போலவே சங்காவைப் பற்றியும் பெரிய ஆடம்பரத்துடன் பேசுகிறார்கள். அவ்வாறு உலகமே ஏற்றுக் கொண்ட மற்றுமொருவராகவே ஹதுருசிங்கவை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த நாடகம் எல்லாவற்றையும் உலகமே அவதானித்துக் கொண்டுள்ளது…”