கோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை

கோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை

(FASTGOSSIP | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் நேரடி பேச்சுவார்த்தையொன்று எதிர்வரும் தினத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

குறித்த பேச்சுவார்த்தையின் போது எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முறை தொடர்பில் உடன்பாடு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.