காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு இன்று அனுஷ்டிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு இன்று அனுஷ்டிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமானது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை, இன்று( 30) பிற்பகல் நினைவு கூறுகின்றது.

2011 ஆம் ஆண்டின் பிரகடனத்தை தொடர்ந்து, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஆயிரிக்கணக்கானோர் இந்நாளில் நினைவு கூறப்படுகிறார்கள். கடந்த ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முதன் முதலில் அரச தலைமையிலான நிகழ்வாக நடத்தியது.

இதற்கமைய, இந்த வருடம் காணமால்போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தின நிகழ்வுகள் இன்று(30) பிற்பகல் 12.30-3.30 வரை, இல:- 32, சேர் மார்க்கஸ் பெர்ணான்டோ வீதி, கொழும்பு 7 இல் உள்ள, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளது.

இதன்போது, “வலி ஒரு போதும் மறையாது, உண்மையை கண்டுபிடிப்பதற்கான எங்கள் பொறுப்பை நிறைவேற்றுவோம்” என்ற தலைலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றும் இடம்பெறவுள்ளமை யும்குறிப்பிடத்தக்கது.