இன்றும் நாளையும் இணையதள சேவைகள் முடக்கம்

இன்றும் நாளையும் இணையதள சேவைகள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முஹர்ரம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் ஆகிய நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றும் நாளையும் மொபைல் சேவை துண்டிக்கப்படுவதாக அந்நாட்டு தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முஹர்ரம் பண்டிகையையொட்டி நடைபெறும் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)