என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா – இன்று நிறைவு விழா

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா – இன்று நிறைவு விழா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் நிறைவு விழா இன்று(10) நடைபெறவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

கண்காட்சி கடந்த 7 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.

கண்காட்சியின் இறுதி நாளான இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலானோர் கண்காட்சிக்கு வருகைதந்திருப்பதுடன், இது வரையில் கண்காட்சியை 3 இலட்சத்திற்கு அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் 55 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கென 90 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன மேலும் தெரிவித்தார்.