ஹேமா பிரேமதாசவினால் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு – அம்பலமானது நாடகம்

ஹேமா பிரேமதாசவினால் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு – அம்பலமானது நாடகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தாயான ஹேமா பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமை தொடர்பில் அவர் இதன்போது கலந்துரையாடி இருந்ததாக கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாச ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியினை விட்டு செல்ல மாட்டார் என்றும் அவரை சூழ உள்ளோர் சஜித்திற்கு புதிய கட்சியினை ஆரம்பிக்குமாறு கட்டயப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)